சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தமையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து அவரது பிரதி அமைச்சுப் பதவி பறிபோனது.
நேற்று 18ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர் அவரது பிரதியமைச்சர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சுப் பதவி மீண்டும் கிடைத்ததை அடுத்து களனியப் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களுடன் பால்சோறு பகிர்ந்துண்டு மகிழ்ந்தார் மேர்வின் சில்வா.
பின்னர் ஊடகவியலாளர்ளுடன் பேசிய அவர் , சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. பத்திரிகை ஒன்று என்னுடை செய்திகளாலேயே விற்பனையாகின்றது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்கள் தமது பேனாவை தூக்குமேடைக்கு செல்வதற்கும் மற்றோரை புண்படுத்தவும் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நேற்று பாரளுமன்றில் பேசிய சரத் பொன்சேகா, தான் சிறைக்குச் செல்லலாம் ஆனால் ஏதோ ஒரு வடிவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவித்தார். இது எதை குறிப்பிடுகின்றது. மக்களை கொன்ற, வங்கிகளை கொள்ளையடித்த இளைஞர்களை சுட்டுக்கொன்ற ஜேவிபி யின் கருத்தினை பிரதிபலிக்கின்றது.
நான் ஒன்றை சரத் பொன்சேகாவிற்கு சொல்கின்றேன். எனது ஜனாதிபதி இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டார் என்பதை பொன்சேகா மனதில் கொள்ளவேண்டும் என்றார் மேர்வின் சில்வா.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஊடகங்களுக்கு மிரட்டல்: அடி தடி அமைச்சர் மேர்வின் சில்வா