மகிந்தாவின் புகைப்படத்தை விகாரப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நுகேகொடை பிரதேசத்தில் இந்த அச்சகம் அமைந்துள்ளதாகவும், அச்சகத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுவரொட்டிகள் வெளி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவரொட்டிகளை விநியோகம் செய்த நபர்களை கண்டு பிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மகிந்தாவின் புகைப்படத்தை விகாரப்படுத்தி அச்சிடப்பட்ட 15 அச்சுப் பிரதிகளின் ஊடாக குறித்த அச்சகம் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயா சமரவீரவின் வழிகாட்டலின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மகிந்தாவின் உண்மையான உள்ளுணர்வை சுவரொட்டியில் வெளிப்படுத்திய நபர் கைது