தமிழ்தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ பியசேன அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18ஆவது அரசியல் திருத்திற்கு எதிராக வாக்களிப்பினை மேற்கொள்வது எனக் கூடி முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிகளில் அங்கம் பெற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த ஒரு சிலரும் இந்த வலைக்குள் சிக்கலாம் என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், பியசேன அரசுக்கு ஆதரவு வழங்குவார் என்ற தகவல் முதன் முதலில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாக வெளிவந்திருந்தது.
இது தொடர்பில் உடனடியாக கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. உடனடியாக அவரைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பிற்கு தான் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லை என்று பியசேன தெரிவித்திருக்கின்றார். இதேவேளை நேற்றைய நாள் பியசேனவிற்கான பாதுகாப்பினை அரசு அதிகரித்தமையை அடுத்து மீண்டும் பியசேன அரசிற்கு ஆதரவு வழங்கவுள்ளார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதும், கூட்டமைப்பின் உயர்மட்டம் உடனடியாகச் செயற்பட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பியசேனவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் பேச்சுக்கள் நேற்று இரவு நடைபெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பியசேன, என் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. நாளைய நாள் விவாதத்தின் போது எனக்கு ஐந்து நிமிடங்கள் உரையாற்ற நேரம் ஒதுக்குங்கள். நான் சரியான முடிவினை வெளிப்படுத்துவேன்" எனக் கேட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து அவருடைய கூற்றினை நம்பிய கூட்டமைப்பு அவருக்கு உரையாற்றவென ஐந்து நிமிடத்தினை ஒதுக்கி இன்றைய விவாத நேரத்தில் கொடுத்திருக்கின்றது.
அவருடைய நேரம் வந்ததும், திடீரென தனது சட்டைப் பையில் தயார் நிலையில் வைத்திருந்த உரையினை எடுத்து வாசித்த பியசேன, மஹிந்தராஜபக்சவைப் புகழ்ந்து தள்ளியதுடன், மீள்குடியேற்றம் உட்பட்ட நடவடிக்கைகளில் தான் திருப்பி அடைந்துள்ளதாகவும், இதனால் அரசினால் முன்வைக்கப்படுகின்ற 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் உடனடியாவே நாடாளுமன்றில் இருந்து வெளியேறியிருக்கின்றார். அவரை அரச தரப்பினர் பாதுகாப்பாக இடம்மாற்றியதாக தெரியவந்துள்ளது.
மஹிந்தராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனிய பாரதியே பியசேனவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன.
கடந்த யூன் மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை மஹிந்த ராஜபக்ச சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டினை மட்டுமே அரசு ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் ஒரு புகைப்படம் பியசேனவுக்கு மஹிந்தராஜபக்ஷ கைலாகு கொடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிய எம்.பி. பியசேன: நடந்தது என்ன?