Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்மொழிபற்றாளரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான தமிழருவி மணியன் அவர்கள், அவுஸ்திரேலிய மெல்பேண் வாழ் தமிழர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்கின்றார். விக்ரோரிய மாநிலத்திலுள்ள தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன், விக்ரோரிய ஈழத் தமிழ்ச்சங்கத்தால் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியில் முதன்மை செயற்பாட்டாளராக விளங்கிய தமிழருவி மணியன் அவர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளைக் கண்டும், இந்திய தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பிழைப்புவாத அரசியலை கண்டும் வெகுண்டு, தனது பதவியையும் துறந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

கடந்த வாரம் சிட்னியில் நடைபெற்ற கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இவர், தற்போது தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்பு ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், கிழக்கு தீமோரைப் போல தமிழீழமும் தனிநாடாவது தவிர்க்கமுடியாது என கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்பட்டுவரும் இவர், தமிழ்நாட்டிலும் ஆடம்பர அரசியலை ஒழித்து ஊழலற்ற நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக முனைப்புடன் செயற்பட்டுவருகின்றார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்துள்ள இவர் சிட்னியில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இவர், அடுத்ததாக மெல்பேணுக்கும் அதனை தொடர்ந்து அடிலெயிட், பிறிஸ்பேணுக்கும் செல்கின்றார்.

விக்ரோரிய மாநிலத்திலுள்ள தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன், விக்ரோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தால், செப்ரம்பர் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணி தொடக்கம் 3 மணி வரை, ஸ்கோர்ஸ்பியில் அமைந்துள்ள சென் யூட்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அனைத்து மக்களையும் கலந்து கொண்டு, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Public gathering with Thamil Aruvi Maniyan

Venue: St Jude Community Hall, George Street, Scoresby, Victoria (melway Ref:72G5).

Time: 12th Sepetember from 1PM till 3PM

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.

அவுஸ்திரேலியா.

தொடர்புகள்:

மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

+61414185348

**************************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to "தமிழருவி மணியன்” அவர்கள் மெல்பேண் வாழ் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேரமாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com