Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவின் மிகப்பெரும் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த குரலாக வேற்றின மக்களிடையேயும், கனடியத் தேசிய நீரோட்டத்திலும் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது.

இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

கனடியத் தமிழர் காங்கிரஸ் அண்மையில் வருகை தந்த சன் சீ கப்பல் அகதிகள் விவகாரத்தில் அனைவரும் மெச்சும் வண்ணம் திறமையாகச் செயற்பட்டு வந்ததும் இவ் அகதிகள் தொடர்பான விடயங்கள் மேற்படி அலுவலகத்தில் இருந்த கணனியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தைச் சல்லடை போட்டு தேடியுள்ள வன்முறையாளர்கள் அங்கிருந்த ஆவணங்களையே பெரும்பாலும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். ரொறன்ரோப் பொலிசார் இவ்விவகாரத்தை ஒரு பாரதூரமான சம்பவமாகக் கருதி அதீத விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடியத் தமிழர்களின் ஒரு சாராரும் தாமும் கனடியத் தமிழ்க் காங்கிரஸைப் போல கப்பல் விவகாரத்தையொட்டிச் செயற்பட முனைந்த போதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சிறீலங்கா அரசின் கைகளிற்கு கிடைக்குமானால் அதனால் அகதிகளாக தற்சமயம் வந்துள்ளவர்களின் சிறீலங்காவிலுள்ள உறவுகள் பாதிக்கப்படுவார்கள் என கனடியத் தமிழ்க் காங்கிரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com