Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ..நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் இன்று (12.09.2010) ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் நாட்டில் கால் பதித்துள்ளது.

தொடர்ந்து 16வது நாளாக நடைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகியோர், ஜேர்மன், பிரான்ஸ் எல்லைப்புறப்பகுதியான சார்புறூக்கன் என்ற இடத்தை இன்று காலை 10மணியளவில் சென்றடைந்தனர்.

அங்கு கூடியிருந்த ஜேர்மன் வாழ் அன்புத் தமிழ் உறவுகள் மலர்க் கொத்துக் கொடுத்து, மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர். அதே நேரம் பிரான்ஸ் வாழ் உறவுகள் அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்ததோடு, தொடர்ந்தும் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

ஜேர்மன் சார்புறூக்கன் என்ற இடத்தில் சிறு ஒன்று கூடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது, திரு. ஜெகன் அவர்கள் உரையாற்றுகையில் ஜேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளதாகவும், தொடர்ந்தும் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் உறவுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தற்போது ஜேர்மன் நாட்டில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த நடைப்பயணத்தைக் கேட்டறிந்து, அவர்களும் இந் நடைப்பயணத்தில் இணைந்து கொள்வார்களென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசு மீது .நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜேர்மனை சென்றடைந்த மனித நேய நடை பயணம்: நூற்றுக் கணக்கான மக்கள் வரவேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com