Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்ளும் ஜெகன், தேவகி மற்றும் வினோத் அவர்களுக்கு வன்னிமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை ஸ்ரீலங்காவை புறக்கணிக்கவேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு கடந்த மாதங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபைநோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட சிவந்தனை வாழ்த்தி நிற்பதுடன் பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் சிவந்தன் ஏந்திய தீ அணையாது தொடர்வதோடு நின்றுவிடாமல் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின் கதவுகளை தட்டவேண்டும். அப்போதுதான் வன்னி வாழ் எங்களின் வாழ்வில் விடிவு கிடைக்கும்.

வன்னி மக்களாகிய எங்களுக்கு அறியப்பட்டவர்தான் ஜெகன் அங்கிள். தனது வயது முதிர்ந்த காலத்திலும் தமிழ் மக்களுக்கு நீதிவேண்டி மனிதநேய நடைப்பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இன்றும் நாங்கள் வன்னியில் வதைமுகாம் வாழ்கையினைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். விடுதலைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஆசியுடன் இந்த விடுதலைத்தீப்பயணம் தொடரவேண்டும் என வேண்டுகின்றோம்.

பெல்ஜியம்ஐரோப்பிய ஒன்றிய தலையைகம் நோக்கியான மனிதநேய நடை பயணத்தினை வாழ்த்துகின்றோம்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மூச்சுடனும் மாவீரர்களின் ஆசியுடனும் தமிழ் மக்களின் விடுதலைப்பயணம் உலகப்பரப்பில் தொடர வன்னி மக்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தை வாழ்த்துகிறோம்: வன்னிமக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com