Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. அப்படியிருந்தும் இருதரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள நிருபமாவை நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

நேற்று முற்பகல் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் நிருபமா ராவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போதே நிருபமா இந்தக் கேள்வியை எழுப்பியதாக அரங்கத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நிருபமா ராவிடம் முன்வைத்திருந்தனர். அதே கோரிக்கைகளை நேற்று தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளும் முன்வைத்த போதே நிருபமா இந்தக் கேள்விகளை எழுப்பியதாக அரங்கத்தினர் கூறியுள்ளனர்.

இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் ஒன்றாக வரமுடியவில்லை. என்று அவர் அரங்க பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழ் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் அரங்கம் தொடர்பில் நிருபமா கேள்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com