Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதிபதி இளஞ்செழியனைப் பற்றி அறிந்திருப்போர் எமது உலகத் தமிழ் மக்களில் அதிகளவு எண்ணிக்கையை கொண்டவர்கள். அண்மையில் கனடாவிற்கு வருகை தந்து தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்த நீதிபதி.

மிக விரைவில் திருகோணமலையிலிருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு மாற்றலாகிச் செல்லவுள்ளார் என்பதும் எமக்கு பிந்திக் கிடைத்த செய்தியாகும்.

இந்த இளஞ்சிங்கம் இளஞ்செழியன் நமது மக்களால் தீரச் செயலுக்காக புகழப்படுவதற்கு காரணம் அவர் வன்முறையை கையிலெடுத்து நின்று அநீதிக்காக போராடவில்லை. தனக்குரிய நீதித்துறை சார்ந்த பலத்தை கையிலெடுத்த வண்ணம். தனது தாய் மண்ணில் அநீதிகள் நிகழுகின்றபோது அதை எதிர்த்து நின்றவர். குற்றவாளிகளாக தான் கண்ட உயர் இராணுவ அதிகாரிகளைக் கூட முகாம்களுக்குச் சென்று கைது செய்து வரும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தவர் இந்த இளஞ்சிங்கம் இளஞ்செழியன்.

பல தடவைகள் வவுனியாவில் தனது நீதித்துறை சார்ந்த பிரதேசத்தில் பல அப்பாவிகள் இராணுவக் கொடியவர்களால் கொலை செய்யப்பட்ட போது அந்த கொலைக்கு காரணமானவர்கள் குறிப்பிட்ட முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டு வாய்மூடி மௌனியாக இருக்காமால் அந்த முகாம்களின் உயர் அதிகாரிகளையும் கொலைகளுக்கு காரணமான இராணுவச் சிப்பாய்களையும் கைது செய்து தனது நீதிமன்றத்திற்கு முன்பாக ஆஜர் செய்யுங்கள் என்று துணிச்சலாக முழக்கமிட்டவர் இந்த இளஞ்சிங்கம் இளஞ்செழியன்.

ஆனால் அந்த கைதுகள் நடைபெறவில்லை. பொலிஸ்காரர்கள் இராணுவ முகாம்களுக்குச் சென்று இராணுவத்தை பகைக்க விரும்பவில்லை ஆனால் இந்த துணிச்சலான நீதிபதி தொடர்ந்தும் தனது நீதித்துறை சார்ந்த பணியை அவ்வாறே செய்து வந்தார். ஆனால் இவரது முழக்கம் அந்த மண்ணை அதிரச் செய்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தொண்டைக்குள் துளி நீராகச் சென்று அவர்களின் அச்சம் என்ற தாகத்தை தீர்த்து நின்றது.

இவ்வாறான தீரக்குரலுக்கு உரிய அந்த நீதிபதி இளஞ்செழியனை சிங்கள அரசோ அல்லது அரசிற்கு துணைபோதும் இராணுவக் கும்பலோ ஒன்றும் செய்து விடவில்லை. உலகம் தங்கள் செயல்களைப் பார்த்து நிற்கின்றது என்று கொடியவர்களும்சும்மாஇருந்துவிட்டார்கள். ஆனால் இளஞ்சிங்கம் இளஞ்செழியன் தனது பணியை தொடர்ந்து செய்து வருகின்றார்.

இவ்வாறான தகவல்களுக்கு முத்தாய்ப்பாக நேற்று ஒரு செய்தி கொழும்பிலிருந்து வந்துள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 50 வயதுடைய ஒரு தமிழ்க் கைதி சிங்கள நீதிபதியைப் பார்த்து நியாயமான ஒரு கேள்வியை எவ்வித அச்சமுமின்றி கேட்டுள்ளார்.

அந்த கேள்வி அந்த சிங்கள நீதிபதியை சற்று செவி சாய்க்க வைத்துள்ளது என்றே நாம் கூறவேண்டும்.

அந்த துணிச்சலான தமிழ்க்கைதி நீதிபதியைப் பார்த்துவிடுதலைப் புலிகளின் முக்கிய பங்காளிகளாக விளங்கிய கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி (குமரன் பத்மநாதன்) ஆகியோர் தற்போது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் செல்லப்பிள்ளைகளாக உள்ளார்கள்.

ஆனால் ஒரு குற்றமும் செய்யாத தமிழர்களாகிய நாங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக கொடிய சிறைகளில் ஏன் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம்? என்றார்.

இவ்வாறான துணிச்சல் மிகு நம்மவர்களால் மாற்றங்கள் எதனையும் அடைய முடியாவிட்டாலும் உளரீதியாக ஏனைய நம்மவர்களில் மாற்றங்கள் எதனையும் காண முடியும் என்றே நம்புகின்றான்.

கனடா உதயன்: கதிரோட்டம்


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இளஞ்சிங்கம் இளஞ்செழியனின் வழியில், வெலிக்கடையில் ஒரு தமிழ்க் கைதி முழக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com