Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பேருந்து நிலையம் அருகில் கருணாநிதி அரசின் கருத்துரிமைப் பறிப்பு மற்றும் அடக்குமுறைக்கு ஏதிராக புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் கருணாநிதி அரசே! கருத்துரிமையைப் பறிக்காதே! பொய்வழக்குகளை உடனே திரும்பப்பெறு! தமிழக மக்களே!சனநாயக் சக்திகளே! அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து 09-09-2010 மாலை 6.00 மணி அளவில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினர்.

நடந்து முடிந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை " ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கத் துணைப் போன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாகக் காட்டச் செம்மொழி மாநாடா ?" என்று விமர்சித்து துண்டறிக்கை,சுவரொட்டிகள் மூலம் பரப்புரை செய்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரை தமிழகம் முழுவதும் 150 மேற்பட்டோர் மீது பொய் வழக்கு பொட்டு (124 தேச விரோத வழக்கு, ரவுடித்தனம் செய்ததாக, காவல்துறைக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக, வாகனங்களைக் அடித்து நொறுக்கி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, காவல்துறையினர் மிது கல் வீசியதாக) சிறையில் அடைத்தனர்.

இக்கைதை கண்டித்தும் கருத்துரிமைக் பாதுகாக்க கோரி செப்-4 ல் நடத்த திட்டமிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சென்னை குரோம்பேட்டையில் பெண் தோழர் உட்பட 4 பேர் மீது வழிப்பறி செய்ததாகவும், கொலை மிரட்டல் செய்ததாகவும் பொய் வழக்கு போட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தது கருணாநிதி அரசு. " சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த ஆணை பெற்று " சனநாயக விரோத கருணாநிதி அரசை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் கண்டனப் பொதுகூட்டம் நடத்தினர்.

இப்பொதுக்கூட்டத்திற்கு தோழர்.தமிழ்வாணன்(புரட்சிகர இளைஞர் முன்னணி) தலைமை தாங்கினார். தோழர்.மார்க்ஸ்(புரட்சிகர இளைஞர் முன்னணி),சிவ.காளிதாசன்(.தே.வி.),மா.மானோகரன்(...),கா.ஆனந்தன்(..வி.மு),தாமரை(பு.தொ.மு) ,மு. நடராஜன்(.பொ.(மா.லெ)-மக்கள் விடுதலை), .ரே.ராசுக்குமார்(பெ.தி.), கரிகாலன்(.தே.)), இராசிவ்காந்தி(நாம் தமிழர் கட்சி),கபிலன்(பு.மா.மு) ஆகிய அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருணாநிதி அரசின் தமிழர் விரோத அடக்குமுறைகளை கண்டித்தும்,சிறையில் உள்ள தோழர்களை உடனே விடுதலைச் செய்யக்`கோரியும் கண்டன உரையாற்றினார்கள்

தோழமையுடன்,

புரட்சிகர இளைஞர் முன்னணி

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கருணாநிதி அரசின் கருத்துரிமைப் பறிப்பை கண்டித்து சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com