Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது.

கடந்த முறை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் யாழப்பாணம் வந்தபோது டி.ஆர் பாலுவை சனீஸ்வரன் எனக்குறிப்பிட்ட வலம்புரி நாளேடு நிருபமா ராவின் யாழ் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட தனது பதிப்பின் ஆசிரியர் தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பில் சபையோர் கருத்து இடம் பெற்ற வேளை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி..சிற்றம்பலம் அவர்கள்

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியா எங்களை கைவிட்டு விட்டது. இந்தியா நினைத்திருந்தால் எங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். இப்போதும் எங்கள் பிரச்சினைக்கு இந்தியாவே தீர்வுகாண வேண்டும்.” என்ற கருத்தை முன் வைத்தபோது அவரது கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பது போன்ற பாவனையுடனும் நிருபமா ராவ் ஏற்றுக்கொண்டார்.

இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது எனவும், நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன்நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதைப் பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தடவை இலங்கையின் நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், டி.ஆர் பாலு கடும்போக்காளராக நடந்துகொண்டதாகவும் அவர் சீறிச் சினந்ததாகவும் பேராசிரியர்கள் முதற்டகொண்டு அவர் எவரையும் மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு அவரை சனீஸ்வரன் என குறிப்பிட்டு ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

இது இந்திய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டதால் இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நிருபமா ராவின் யாழ் விஜயம் இந்திய நிலைப்பாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.

வலம்புரி

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com