Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நாடு பொதுத் தேர்தலோன்றுக்கு சென்றாலும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் நிலையானதொரு தேசிய அரசாங்கம் அமையப்பெறும் எனும் நம்பிக்கை எமக்குள்ளது. அதில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் குறித்த தகவல்கள், மீள்குடியேற்றம் உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு பின்னரும் மைத்திரிபால சிறிசேனவே இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பார் என்பதால், அவருடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விசயங்கள் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மைத்திரியுடனான பேச்சு தொடரும்; தேர்தலின் பின் நிரந்தரத் தீர்வு: சம்பந்தன் நம்பிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com