தமிழீழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்று உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் இந்திய போராட்ட வீரர் பூலித் தேவனின் 295ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கவிஞர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இரண்டு இலட்சம் தமிழர்களையும், 40ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவிரக்கமற்று சிங்கள இராணுவம் கொன்று குவித்தது.
தமிழீழத்தில் நாங்கள் போராவில்லை. போராட்டம் எங்களுக்குத் திணிக்கப்பட்டது. அதனால் தான் நாங்கள் போராடுகின்றோம். வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித் தேவன் பாய்ந்தார். அதேபோல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்துப் பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை? எத்தனை? என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ், சசிகலாவின் கணவர் எம். நடராஜன் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிங்களவனை எதிர்த்து பாய்ந்த பிரபாகரன்: உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்