Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆளும் கட்சியின் உத்தேச அரசியல் சாசனத்திருத்தம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தினத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.இந்தப் போராட்டத்தினால் வன்முறைகள் ஏற்படக் கூடும் எனவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய தலைமையில் நேற்றைய விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்திற்குச் செல்லும் பாதைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

ஆதரவு கட்சிக்கு பணம் அன்பளிப்பு

இதேவேளை அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 500 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பணம் வழங்கப்படவுள்ளதாக பிரபல சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதி, திறமை மற்றும் கட்சியில் காணப்படும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தொகை உயர்த்தப்படும் என அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான பேரம் பேசும் நடவடிக்கைகளை சில சிரேஷ்ட உறுப் பினர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரி விக்கப்படுகின்றது. அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு ஆளும் கட்சியில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அதனைப் பகிரங்கமாக வெளிப் படுத்த முடியாத நிலைமையில் அவர்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் அமைப்புத் திருத்தங்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமுல்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கொழும்பில் வன்முறை வெடிக்கலாம்! பாதுகாப்பு தீவிரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com