Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடி ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் நேற்றையதினம் கிளிநொச்சியில் கூடிய நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் பி.பி.சி தமிழோசைக்கு கொடுத்த ஒலிவடிவிலான பேட்டியின் தொகுப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசியல் துறை துணைபொறுப்பாளர் தங்கன், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், மற்றும் பிரியன், உட்பட பலர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரோடு சென்று சரணடைந்த்தாகவும், அதனைத் தான் நேரடியாகப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் 9 பேர்கொண்ட தூதுக்குழு இலங்கை சென்று கே.பியைச் சந்தித்தவேளை, இலங்கை புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில ஹெதவிதாரணவிடம், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அப்படி தங்களிடம் யாரும் இல்லை என அவர் பதிலளித்ததோடு, இராணுவத்திடம் சரணடைவதை யாராவது பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பலர் சரணடையும்போது, பலரின் மனைவிமார்களும் கூடவே இருந்திருக்கின்றனர். அவர்களே அதற்கு சாட்சியாகும்!

பணத்துக்காகவும், பதவி, அந்தஸ்துக்காகவும், அரசுடன் கூடித் திரியும் பலர் இருக்கும்போது, இன்னும் மாறாமல் ஈழத்தில் இருக்கும் ஒரு மறத் தமிழச்சியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதுவும் ஈழத்து தமிழர்களின் உள் உணர்வு என்ன என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கிறது.

ஒலிவடிவம்







மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

2 Responses to அருட்தந்தை தலைமையில் சரணடைந்த எழிலன் எங்கே? அவரது துணைவியார் கேள்வி

  1. kalki Says:
  2. உறவுகள் தேடுகின்றனர்...
    உணர்வுகள் பரிதவிக்கின்றது...
    உளமது சாந்தியடைய - நின்
    இருப்பு உறுதி செய்தால் - உன்னை
    நினைத்து வாழ்வோர்
    நிம்மதியடைவர் வீரனே....
    நீ நடந்த சுவடுகளில்
    நிழல் தெரியவில்லை ...
    நிஜமான உன் வீரம் புலப்படுகிறது...
    மூன்று ஆண்டுகள் கழிந்தன...
    முள்ளிவைக்காலில் முற்றுப்பெற்ற
    தமிழர் தம் வாழ்வு
    தரம் தாழ்ந்து இன்னும் தான் போகிறது...
    ஏனென்றால் ...
    உனைப் போன்ற வீரர் காணாமல் போவதால்.....

    கல்கி

     
  3. kalki Says:
  4. சிங்களவர் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறில்லை.
    உறவுகளின் வலியை புரிந்து கொள்ளாதவன் மனிதனல்ல. மக்களிற்காக போராடியதைத் தவிர அவர்கள் செய்த தப்பு என்ன? தங்கள் சுக துக்கங்களைத் தவிர்த்து இந்த நன்றி கெட்ட ஜனத்துக்காக தங்களை அர்ப்பணித்தது தான் அவர்கள் செய்த மாபெரும் தவறு. துரோகிகளை முதலில் களை எடுக்காமல் விட்டது அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.
    உறவுகளைத் தேடித் தவிப்பவர்களை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மனசாட்சியைத் தொலைத்தவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்?

    முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து மூன்றாண்டு ஆகப்போகிறது. எப்போது இவர்களின் நிலையை அறிவோம் என்று தவிக்கும் எமக்கு யார் தான் ஆறுதல்?

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com