Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இடம்பெறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளின் போது செய்தி சேகரிப்பதற்கு பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பி.பி.சி.) அனுமதி வழங்கப்படவில்லையென அந்த நிறுவனம் கூறியுள்ளது.

முன்னாள் போர் வலயத்திலிருந்த மக்களுக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மூன்று நாட்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

மோதல் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான பணிகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அரசு கூறுகின்றது.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை ஆரம்பமான அமர்வுகளில் கலந்துகொள்ள பி.பி.சி.க்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணியின் முக்கியமான பகுதியாக இருப்பது யுத்தத்தால் இடம்பெயர்ந்த, துன்பப்பட்ட, காயமடைந்த அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்த சாதாரண தமிழ்ப் பொதுமக்களை சந்திப்பதாகும்.

வார இறுதியில் (நேற்றும் இன்றும்) ஆணைக்குழு கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அமர்வுகளை நடத்துகிறது. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற கடல் நீரேரிப்பகுதிக்கும் குழு செல்லவுள்ளது.

இந்த அமர்வுகளில் பல பகிரங்கமாக இடம்பெறவுள்ளன. ஆனால், பி.பி.சி. செய்திச்சேவை இந்த அமர்வுகளில் பங்கேற்க மேற்கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்டில் வடபகுதியில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வுகளுக்கு பி.பி.சி. சமுகமளித்திருந்தது. ஆனால், முகாம்களில் இடம்பெயர்ந்தோருடன் இடம்பெற்ற சந்திப்புகளில் பி.பி.சி.க்கு அனுமதியளிக்கப்படவில்லை.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கிளிநொச்சியில் பி.பி.சிக்கு அனுமதி மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com