Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியில் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் என்ற சிறப்பு மாநாடு இன்று 10:00 மணிக்கு ஜேர்மனியில் RHEINE என்னும் இடத்திலுள்ள Elisabethschule – Aula பாடசாலை மண்டபத்தில் ஆரம்பம் ஆனது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலக் கல்விப் பொறுப்பாளரும், பேராசிரியருமான . பாலசுந்தரம் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்றார். அனால் மாநாட்டிற்கு சுமார் 10 பேரே வருகை தந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, சிறிவாத்தி (சிறிதரன்) , பா.அரியநேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோரோடு வித்யாதரனும், பேராளராகக் கலந்து கொண்டார். ஆயினும் இம் மாநாட்டை மக்கள் புறக்கணித்துள்ளனர். மாநாடு தொடங்கும் முன்னர் அகவணக்கம் செலுத்தப்படவில்லை, அத்தோடு நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளோ அல்லது, வேறு தமிழ் அமைப்புகளுக்குகோ எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லையாம்.

இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்படும் எவருக்கும், மற்றும் விடுதலைப் புலிகளை முன் நிலைப்படுத்துவோரையும் தாம் அழைக்கப்போது இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனராம். அதாவது இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர்கள் இயங்குவார்களாம். இதனையடுத்து இம் மாநாடு படுதோல்வியடைந்து மன்கவ்வியுள்ளது. பெரும் பொருட்செலவில், தொலைக்காட்சியிலும், மற்றைய ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. இப் பொருட் செலவை வன்னியில் இன்னலுறும் தமிழ் மக்களுக்கு கொடுத்திருந்தால், ஒருவேளை உணவையாவது அவர்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள்.

போலி கௌரவத்திற்காகவும், புகழுக்காகவும் மாரடிக்கும் இக் கூட்டத்தின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது.

அதிர்வு

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜேர்மனியில் நடைபெற்ற "அகம் புலம் மாநாடு" நிகழ்வில் பத்து பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com