மட்டக்களப்பு கரடியனாறு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தற்சமயம் தேறி வருவதாகவும் ஓரிரு தினங்களில் சிலரை வீட்டுக்கு அனுப்ப முடியுமெனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதேவேளை, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்
நேற்றைய தினம் படுகாயமடைந்த நிலையில் 44பேர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களில் 19 காவற்றுறையினரும் அடங்குவர். மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த 4பேர் உடனடியாக கொழுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனையவர்களில் ஒரு பொலிஸார் மரணமாகிவிட்டார் எனவும் மருத்துவர் முருகானந்தம் கூறினார்.
கட்டட துகள்கள் உடம்பில் பாய்ந்ததாலேயே பெரும்பாலானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் பாரிய எரிகாயங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இன்று சனிக்கிழமை அதிகாலையிலும் அடையாளம் காணப்படமுடியாமல் சிதைவடைந்த நிலையில் ஒரு சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் உயிரிழப்பு
நேற்று நடைபெற்ற கரடியனாறு வெடிச்சம்பவத்தில் காயமுற்று இருந்து 22 காவற்றுறையை சேர்ந்த ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கரடியனாறு காவல் துறை நிலையத்தில் வெள்ளிக்கிழமை மு.ப.11.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் காயமுற்ற 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 28 வயது உடைய காவல்துறை கான்ஸ்டபிள் குமார, அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 க்கு உயிரிழந்தார்
சடலங்கள் ஒப்படைப்பு
குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு விஜயம்செய்த நீதிபதி, மரண விசாரணை நடத்திய பின்னர்- சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, உறவினர்களிடம் கையளிக்குமாறு மருத்துவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த பணிப்புரைக்கு அமைய, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சடலங்களை உறவினர்களிடம் கையளித்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் முருகானந்தம் தெரிவித்தார்.
துக்கதினத்துக்கு அழைப்பு விடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தல் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அதிகாரிகளை பணிக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பனருமான எட்வின் கிருஷ்ணானந்தராஜா, விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to துக்கதினம் அனுஷ்டிக்க அழைப்பு! மட்டக்களப்பு கரடியனாறு சம்பவம்: பிந்திய தகவல்கள்