முழுத்தேசிய இனத்துத்தினதும் கோரிக்கையாகவும், குரலாகவும் நல்லூரின் வீதியிலே திலீபன் நீரும் அருந்தாமல் யாகம்செய்த நாட்கள் இவை. கொடும் வெப்பமும்,வெயிலும் நிறைந்த தேசத்தில் தண்ணீரும் அருந்தாமல் இருக்கும் உண்ணாவிரதம் எவ்வளவு கடினமானது என்றும், எத்தகைய வலிகளைத்தரும் என்பதை முற்றும் முழுதாக தெரிந்துகொண்டே திலீபன் அந்த மேடைக்கு வந்து அமர்ந்தவன்.
இதைப்போன்றதொரு பொழுது அது.
ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனமான காலம் அது. ஆயுதங்கள் இல்லாமலேயே சமராடவேண்டி இருந்தது. அதற்காகவே திலீபவேள்வி தொடங்கியது.
தனித்தமிழீழம், சுயாட்சி, சமஸ்டி போன்ற எந்தவொரு ஆட்சிஅதிகார கோரிக்கைக ளும் இன்றி மிகஇயல்பாக தமிழ்மக்களின் அன்றாட வாழ்வு மற்றும் பயமின்றிய நடமாட்டம் இவைகளே அன்றும் திலீபனின் கோரிக்கைகளாக இருந்தன
1.பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ்க்கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்
2.புனர்வாழ்வுத்திட்டம் என்ற பெயரில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்டமுறையில் நடைபெறும் சிங்களகுடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்
3.வடக்கு-கிழக்கு இடைக்காலஅரசு அமையும்வரை இத்தகைய புனர்வாழ்வுதிட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.
4.வடக்கு-கிழக்கில் புதிதாக சிங்கள காவல்நிலையங்களும், ராணுவமுகாம்களும் அமைப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5.சிறீலங்காப்படையினரும் காவல்துறையினரும் முகாமிட்டிருக்கும் பாடசாலைகளில் இருந்து உடனடியாக விலகிகக்கொள்வதுடன்,சிறீலங்காப் படைகளால் தமிழ்கிராமங்களுக்கு அருகில் உள்ள சிங்களகிராமங்களின் ஊர்காவல்படையினருக்கு வழங்கிய ஆயுதங்களை இந்தியா களையவேண்டும்.
இவையே திலீபனின் கோரிக்கைகள்.
இந்தக் கோரிக்கைகளுக்காக ஒரு உன்னதமான இளைஞன் ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல் போராடி இன்று இருபத்து மூன்று வருடங்களாகின்றன.
இந்த இருபத்து மூன்று வருடங்களில் உலகம் எவ்வளவோ விடயங்களில் மிகமிக முன்னேறி வந்துவிட்டது. தகவல், தொழில்நுட்பம், வாழ்வியல், அறிவியல், ஆற்றல், நாகரீகம் என்று எல்லாவற்றிலும் இந்த இருபத்து மூன்றுவருடங்களில் பெருத்த பாய்ச்சலும், முன்னகர்வும் கண்டுஅடைந்துள்ளது.
ஆயினும் இந்த இருபத்துமூன்றுவருடங்களாகியும் இன்னும், அந்த திலீபனின் ஐந்து கோரிக்கைகளும் அப்படியே தொடர்வது மானுடத்துக்கே அவலமானது.
இன்றும் பாடசாலைகளில் ராணுவம்,
இன்றும் புதிது புதிதாக ராணுவ-பொலீஸ் முகாம்கள்,
இன்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைப்புகள்,
இன்றும் புனர்வாழ்வுதிட்டம் என்ற போர்வையிலும், மீளக்குடியேற்றம் என்ற
போர்வைக்குள்ளாகவும் நடைபெறும் சிங்களகுடியேற்றங்கள்,
இப்படியாக இன்றும் திலீபன் நல்லூரில் உண்ணாவிரதத்தில் இறங்கிய காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த இத்தகையவிடயங்களை உடனடீயாக நிறைவேற்றும்படி கேட்டுத்தான் திலீபன் தண்ணீரும் அருந்தாமல் தவம் இருந்தான்.
பஞ்சசீலமும், நான்கு வேதங்களும், தத்துவங்களும், அகிம்சையும் தங்களிடம் இருந்தே தோன்றிதாக கர்வம் கொண்டிருந்த பாரதத்தின் உச்ச அரசில் உற்கார்ந்து இருந்தவர்களுக்கு இதுதான் ‘அகிம்சையின் விஸ்வரூபம்’ என்று பாடம் சொன்னவன் எங்களின் திலீபன்.
திலீபன் வென்றான், தோற்றான் என்பது அல்ல முக்கியம். அவன் தன்காலத்தில் இவைகளை முன்னிறுத்தி போராடினான். அவன் மறைந்து இருபத்துமூன்றுவருடங்களாகிய பொழுதிலும் இப்போதும், சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ் மகன் ராணுவமயமான யாழ்நகருக்குள் நின்றுகொண்டு, இந்திய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிக்கு முன்னால் ஒப்பந்தத்தில் சொன்னவற்றையே நிறைவேற்றாத இந்தியா என்று முகத்திலடித்தாற் போல சொல்லியிருப்பது வரலாற்றின் மிகவும் மறுக்கமுடியாத மீள்எழுகையே ஆகும்.
கோரிக்கைகளும், அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் வரைக்கும் ஏதோ புதிது புதிதான வடிவங்களில் மனிதம் எழும். ஒரு வழி அடைபட்டால், இன்னொரு பாதை திறபடும். பழையது புதியது என்று எதுவானாலும் எது சாத்தியமோ அதுவே போராட்டமுறையாகும்.
அதோ அங்கே, திலீபன் உயிர்துறந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே பத்து நாட்களுக்கு முன்னர் சிற்றம்பலம் என்ற தமிழ்மகன் எல்லாத் தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்தானே அதுவும் திலீபனின் தொடர்ச்சிதான்.
நீண்ட தூரங்களை நடந்தே கடந்து கோரிக்கைகளை வைக்கிறார்களே எங்களின் உறவுகள், அவர்களின் போராட்டமும் திலீபனின் தொடர்ச்சிதான்.
திலீபன் என்பது இடைவெளியின்றி என்றும் தொடரும் ஒரு போர்முறையே.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நிறைவேற்றப்படாமலேயே இருக்கும் தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள்: ச.ச.முத்து