Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது..

இவ்வுலக சமுதாயத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் எமக்கான நியாயத்தை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நாம் மேற்கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில், உலகின் மனசாட்சியைக் கேள்வி கேட்பது போலவும், அறவழிப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் இக்காலக்கட்டத்திற்கு ஏற்பவும் லண்டன் நகரில் இருந்து .நா. மன்றம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டதோடு, நீண்ட நெடிய எமது போராட்டத்தில் தொடர்ச்சியாக எம்மோடு பயணித்த மக்களை நடைப்பயணமெங்கும் சந்தித்து அவர்கள் சோர்வுறாது காத்து எம் வருங்காலம் மீது நம்பிக்கையூட்டிய திரு. சிவந்தன் அவர்களை இவ்வேளையில் மனதார பாராட்டுகிறது .

சிவந்தன் அவர்களது பெருமுயற்சியைத் தொடர்ந்து தற்பொழுது அவ்வகையான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் திரு. ஜெகன், திருமதி தேவகி குமார் மற்றும் திரு. வினோத் அவர்களது முயற்சிக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது.

போர் இறுதிகட்டத்தை நெருங்கிவந்த வேளையில் சூழலுக்கேற்ப தனது நடனத்திறமையை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதிபலித்து ஊடக வழிப்போராட்டத்தை தனிமனிதாய் முன்னெடுத்திருந்த திரு. பிரேம் கோபால் அவர்கள் மீண்டும் அதே விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் எம் இனத்தின் வலியை சுமந்து பதித்து இருக்கிறார்.

திரு.பிரேம் கோபால் அவர்களுக்கும், அவரோடு இணைந்து நடனமாடியதோடு எம் இனத்திற்காய் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் குரல் கொடுப்போம் என்று நிகழ்ச்சி மேடையிலேயே அறிவித்த செல்வி பிரேமினி அவர்களுக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை பணிவான வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறது.

எம் இனப்போராட்டத்தை சுமக்க அடுத்தத் தலைமுறையினர் வீரியமுடன் வெளிவருவதைக் கண்டு மகிழ்வடைவதுடன், தமிழ் இளையோர்கள் அனைவரையும் இதுபோன்று பெரும் முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்ள நோர்வே ஈழத்தமிழர் அவை அன்புடனும் உரிமையுடனும் அழைப்பு விடுக்கிறது.

பஞ்சகுலசிங்கம் கந்தையா,
(வைத்திய கலாநிதி)
தலைவர்,
நோர்வே ஈழத்தமிழர் அவை,
நோர்வே.

விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தாயக நிலையை வெளிப்படுத்திய ஈழத்துகலைஞர்கள் (காணொளி இணைப்பு)

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com