Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி சுவிஸ் ஜெனீவா ..நா சபை முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் புறுசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 130 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று (19.09.2010) 22வது நாளில் ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உற்சாகமாக தொடரப்பட்டு வருகிறது.

மனிதநேய கோரிக்கைகளை முன்வைத்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்களும் கால்கள் வீங்கி குருதி சிந்திய நிலையிலும், முழங்காலுக்கு கீழே உணர்வுகுன்றிய நிலையிலும் மிகவும் மனவுறுதியோடு தமது நடைப்பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

எமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும், உரிமைக்குமான இவ்வாறான போராட்டங்கள் பெல்ஜியத்தோடு நின்றுவிடாது உலகில் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெவேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களோடு சேர்ந்து நடந்து உற்சாகமளிப்பதற்கு சுவிஸ், பிரான்ஸ், யேர்மனி மற்றும் பெல்ஜியத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் தமிழீழ உறவுகள் வந்தவண்ணம் உள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 23ஆம் ஆண்டு நினைவுதினமான இம்மாதம் 26ஆம் நாள் புறுசெல்ஸ் நகரை சென்றடையும் இவர்கள் மறுநாள் 27.09.2010 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய வளாகத்தில் நடைபெறவுள்ளஎழுவாய் தமிழா நெருப்பாய்எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொள்வதுடன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மனிதநேயக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர்.

இந்த மாபெரும் எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமைக்காக குரல்கொடுக்க அனைத்துலக தமிழ் உறவுகளையும் உணர்வோடு அணிதிரள அழைக்கின்றோம்.

அனைத்து நாட்டு நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. உங்கள் பகுதி தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்வதோடு உங்கள் அறிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மேலதிக விபரங்களுக்கு: 0041795949517

போக்குவரத்து விபரங்களுக்கான தொடர்புகளுக்கு:

சுவிஸ் ஈழத்தமிழர் அவை: 0799518522

தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290

சம உரிமைக்கான தமிழ்ர் மையம் ஜேர்மனி: 01732762766

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804

நோர்வே ஈழ்த்தமிழர் அவை: 045477983

பிரித்தானியா: 07403154084

டென்மார்க் தமிழர் பேரவை: 52173671

தமிழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம் 0493885930



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கால்களில் உணர்வு குன்றிய நிலையிலும் உறுதியோடு தொடரும் மனிதநேய நடைப்பயணம் (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com