Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

18.09.2010 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த "அக்கினித்தாண்டவம் 2010"
மேற்கத்தேய நடனப்போட்டி நிகழ்வு சில நிகழ்ச்சி மாற்றங்களுடன் மண்டப மாற்றமும்
செய்யப்பட்டு எதிர்வரும் 23.10.2010 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நிகழ்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்த
போட்டியாளர்களுக்கும், நிகழ்வினைக் காண ஆவலோடு எதிர்பார்த்திருந்த எமது
உறவுகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கு இளையோர்களாகிய நாம் மனம்
வருந்துகின்றோம்.

இவ்வாண்டின் அக்கினித்தாண்டவம் நிகழ்வு Hotel Bahnhof, Bahnofplatz 2, 3186
Dudingen என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் 23.10.2010 அன்று பிற்பகல் 13:00 மணிக்கு
நடைபெறும்.

புலம்பெயர் நாடுகளில் இளம் கலைஞர்களை வளர்ப்பதோடு தாயகத்தில் மாணவர்களின்
அறிவியல் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன் நடைபெறுகின்ற இந்நிகழ்வானது கடந்த
காலங்களில் வர்த்தக நிறுவனங்களின் அனுசரணையோடும் பேராதரவோடும் நடைபெற்றதும்
அதன்மூலம் கிடைக்கப்பெற்ற இலாபத்தைக்கொண்டு தாயகத்தில் மாணவர்களின் அறிவியல்
வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டிற்கும் உதவியளித்து வந்ததும் நீங்கள்
அறிந்ததே.

ஆனால் இவ்வாண்டு எந்தவித அனுசரணையுமின்றி எமது மக்களின் ஆதரவோடு மட்டுமே
நிகழ்வினை நடத்தவேண்டிய நிலையில் இளையோர்கள் நாமுள்ளோம். இதில் எமக்கு இலாபம் வரும் பட்சத்தில் அதனை தற்கால சூழலுக்கேற்ப எமது தாயகத்தில் உள்ள எம்போன்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவுவோம் என்பதை
தெரிவித்துகொள்கின்றோம்.

அத்துடன் நிகழ்விற்கான விண்ணப்ப முடிவு திகதியும் எதிர்வரும் 10.10.2010 வரை
நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவம் மற்றும் நிகழ்வு பற்றிய மேலதிக
விபரங்களை www.akkini.tyo.ch என்ற எமது இணையப்பக்கத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

திகதி: 23.10.2010 நேரம்: 13:00
மண்டப முகவரி: Hotel Bahnhof, Bahnofplatz 2, 3186 Dudingen
தொடர்புகளுக்கு: : +41 (0)79 301 59 95, +41 (0)78 905 47 18,
+41(0)79 923 54 85

நன்றி

தமிழ் இளையோர் அமைப்புசுவிஸ்

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரின் ஊடகச்செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com