வரும் 2011 ஜனவரி மாதத்தில் இலங்கை அரசு, தனது தலைநகரத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தி, தன் மீது இருக்கும் இன அழிப்பு குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக தனது நயவஞ்சகதனத்தை கட்டவிழ்த்துள்ளது, அதை அடுத்து தமிழ் அமைப்புகளும் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் சர்வேச தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர், இதை அடுத்து டென்மார்க் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
சிறிலங்காவின் தலைநகரில் நடைபெற இருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்
2010 ஆண்டு ஜனவரி 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு சநதிப்பில் சில உள்ளர் மற்றும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் கூடி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் 8ம் திகதி வரை கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசின் ஆலோசனைக்கு அமைய தீர்மானித்துள்ளனர்.
சென்ற ஆண்டு சிறீலங்கா அரசாங்கம் இந்திய அரசின் துணையூடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை புரிந்ததையூம் எண்ணில் அடங்காத மனித உரிமை மீறல்களை புரிந்ததற்காகவூம் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் தம் கண்டனங்களை வெளிப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சில காய்நகர்த்தல்களையூம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதன் முதல் நகர்வாகவே சிறீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தனது ஏற்றுமதி வரிச்சலுகையை இழந்துள்ளது. மனிதத்தை நேசிக்கும் பல நாடுகள் தலைவர்கள் மனித ஆர்வாலர்கள் வன்னியில் இடம்பெற்ற போர்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
போர்க்குற்ற விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டால் தாம் தண்டிக்கப்படுவோம் என அஞ்சும் மகிந்த அரசாங்கம் எப்பாடு பட்டாவது சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்கு தன்னாலான அனைத்து நகர்வூகளையூம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இந்திய திரைப்படவிழாவை கொழும்பில் ஜூன் மாதம் நடாத்தியது. ஆனால் இதன் கபடத்தனத்தை அறிந்த தமிழ்த்திரையூலகம் அவ்விழாவை முற்றாக புறக்கணித்திருந்தார்கள் அத்தோடு இந்திய முன்னனி நடிகர்கள் அனைவரும் தமிழர்களுக்காக தாமும் அவ்விழாவை புறக்கணித்திருந்தார்கள். தன்மீதுள்ள இரத்தக் கறையை மறைக்க முனைந்த மகிந்தா அரசு பெரும் தோல்வியையூம் அவமானத்தையூம் சந்தித்தது.
தாம் தமிழரின் எதிரி அல்ல எனும் ஓர் பிம்பத்தை காட்டவேண்டிய கட்டாயத்தில் மகிந்தா அரசு இருப்பதனால் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடாத்த அது முனைகிறது. தமிழர் நாம் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களின இரத்தத்தில் நந்திக்கடல் செந்நீரானதையூம் முள்வேலிக்குள் எம்மக்கள் படும் துயரையூம் நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. இதற்கெல்லாம் காரணமான மகிந்தா அரசு தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு எம் மக்கள் விரும்பும் நிரந்தரத் தீர்வூ அவர்கட்கு வழங்கப்படவேண்டும்.
தமிழர்களுக்கு நீதி வழங்கும் வரை இலங்கைத் தீவில் சிங்கள அரசுக்கு சாதகமான அனைத்து நடவடிக்கைகளையூம் புறக்கணிக்குமாறு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரையூம் உரிமையூடன் டென்மார்க் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.
இப்படிக்கு
சந்தோஷ். ம
செயலாளர்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: டென்மார்க் தமிழர் பேரவை