ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தக்கூடிய உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தே பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., ஜே.வி.பி.கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தன.
இன்று புதன்கிழமை உத்தேச திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையேனும் போட்டியிடுவதற்கு வழிசெய்யும் வகையிலான இந்தத் திருத்தங்களை ஐ.தே.க., ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் ஐ.ம.சு.மு. க்கு 144 ஆசனங்கள் உள்ளன.
எதிரணியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எட்டு உறுப்பினர்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.விலிருந்து ஐந்து பேரும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
நேற்று குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி. நிமல் விஜயசிங்க அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே ஐ.தே.க. சின்னத்தில் போட்டியிட்ட திகாம்பரம், பிரபகா கணேசன் ஆகியோர் அரச தரப்புக்கு மாறியுள்ளனர்.
இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக 159 உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுகிறது. அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆரம்பத்தில் எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதிலும் நேற்று முன்தினம் ஆதரித்து வாக்களிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் உத்தேச திருத்தச் சட்ட மூலம் தடையின்றி பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறும் என்பது உறுதியாகிவிட்டது.
நேற்று பாராளுமன்றத்திற்கு கறுப்புச் சட்டைகளுடன் ஐ.தே.க. உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். சபையில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர்கள் உத்தேச சட்டமூலம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என குரல் எழுப்பினர்.
அதேசமயம், மற்றொரு எதிர்க்கட்சியான ஜே.வி.பி. நேற்று பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஜனாதிபதியின் பதவிக்கால வரையறையை அரசியலமைப்பிலிருந்து மாற்றுவது மட்டுமல்லாமல் ஜனாதிபதி அலுவலகத்தின் 10 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலானது அரசாங்கத்தின் முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதாகவும் அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அரசியலமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தொடங்கின