Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம் தேசத்தின் விடுதலைப்பயணத்திலே புலம்பெயர் தமிழ்ச் குமூகத்தினராகிய நாம் இன்று அனைத்துலகத்தின் கண்களை எம் பக்கம் திருப்புவதற்காகவும், எம் தேசத்தின் உண்மை நிலைமையை உணர்த்துவதற்காகவும் முறை கேட்டு, மக்களாட்சி முறையிலே எமது போராட்டங்களை முன்னெடுத்துத்துச் செல்கின்றோம்.

அந்த வகையிலே பிரித்தானியாவில் இருந்து எம் சகோதரன் சிவந்தன் ஏற்றிய தீ இன்றும் தொடர்கின்றது. அதன் தொடராக இன்று எம் சகோதரி திருமதி தேவகி குமார் அவர்களும், மற்றும் எம் சகோதரர்கள் திரு. ஜெகன் அவர்களும், திரு. வினோத் அவர்களும் கடந்த 27.08.2010 அன்று தொடக்கம் தமது நடைவழிப்பயணத்தை ஜரோப்பிய ஒன்றியம் நோக்கி தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

எம் தாயக தேசத்திலே எமது தேசியத் தலைவர் அவர்களின் நேரடி உருவாக்கத்தின் கீழ் உலகமே வியர்க்கும் அளவிற்கு பல சாதனைகளைப் படைத்தார்கள் எம் சகோதரிகள். அந்தவகையிலே இன்று புலம்பெயர் மண்ணிலே எமது சகோதரி திருமதி தேவகி குமார் அவர்கள் எம் தேசத்தின் விடுதலைக்காகவும், எம் மண்ணிலே எமது உறவுகள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும், அனைத்து உரிமைகளுடனும் எமது தாயக மண்ணிலே வாழவேண்டும் என்பதற்காகவும் இன்று இந்த போராட்டத்தை வீறுகொண்டு தடம்பதித்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்.


அவரின் இந்த போராட்டம் எந்தவிதமான தடையுமின்றி வெற்றியுடன் முடிவடைய வேண்டும் என்று பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினராகிய நாம் பெருமிதத்துடன் வாழ்த்துகின்றோம்.

நன்றி.

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

*****************************************
மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தேவகி குமார் மற்றும் எம் சகோதரர்களின் நடை பயணம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்: பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com