பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் மூன்றாவது ஐரோப்பிய நாட்டில் கால் பதிக்கவுள்ளது.
சுவிஸ் நாட்டைக் கடந்து, பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியினூடாக தொடர்ந்து வருகின்ற நடைப்பயணம் தற்போது ஜேர்மன் நாட்டை அண்மித்துள்ளது.
கடந்த 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை பி.பகலில் இருந்து பிரான்ஸ் நாட்டினூடாக நடைப்பயணம் தொடரப்பட்டது. பல குக்கிராமங்கள் வழியாக மிகவும் உற்சாகத்துடன் தொடரப்பட்ட நடைப்பயணத்தின் போது, பிரஞ்சு மக்கள் நடைப்பயணத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கோரிக்கைகள் நிறைவேற தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மானிட நேய நடைப்பயணத்தை தொடர்ந்து வரும் திரு. ஜெகன், திருமதி. தேவகி குமார், திரு. வினோத் ஆகியோருக்கு மனப்பூர்வமான நல் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மானிடநேய நடைப் பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் (12.09.2010) ஞாயிற்றுக் கிழமையன்று 16வது நாளில் தமது நடைப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு பட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வருகை தந்து தமது நல் ஆதரவை வழங்கிவருவதுடன், தாய்த் தமிழக உறவுகள் தொலைபேசி மூலம் உரையாடி அளவுகடந்த உற்சாகம் வழங்கி வருகின்றனர்.
• இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
• எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
• மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மூன்றாவது ஐரோப்பிய நாட்டில் கால் பதிக்கும் மானிட நேய நடைப்பயணம்