தமிழீழ விடுதலைப் போரில் தம் இனிய உயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக, கனடா வாழ் தமிழ் மாணவர்கள் இணைந்து நடத்தும் மாவீரர் வார தொடக்க நிகழ்வு இன்று நவம்பர் 25ஆம் நாள், வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தனித்தனியாக நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து இந்நிகழ்வு அனைத்து மாணவர்களாலும் இணைந்து நடத்தப்படவுள்ளது. மாணவர்களின் ஆக்கத்தில் உருவாhன கலைநிகழ்வுகளுடன் சிறப்புரைளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வானது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, உலகெங்கும் வாழும் எம் அனைத்து உறவுகளும் பார்க்கும் வண்ணம் இளையோர்களால் இணையத்தளத்தினூடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. கனடா, ரொறன்ரோ நேரப்படி மாலை 5 மணி முதல் http:canadatyomedia.org எனும் இணையத்தினூடாக மேற்படி நிகழ்வை நேரடியாகக் காணலாம்.
நிகழ்வு நடைபெறும் இடம்:
Metropolitan Centre
3840 Finch Ave. East,
(Kennedy % Finch)
Scarborough, Ontario
மேலதிக தொடர்புகளுக்கு: 647-706-2771
TYO Media - Canada
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to இன்று கனடா தமிழ் மாணவர் முன்னெடுக்கும் மாவீரர் வார தொடக்க நாள் நிகழ்வு