Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் ஆர்வலர்களும் முன்வருவார்களா?.

மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு தற்போது அதிகரித்துள்ளது! தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் முன்வருவார்களா?

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை தொடர்ச்சியாக காத்தான்குடி முஸ்லிம் நகரசபை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவருகின்றது ஆனால் தற்போது (புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என இலங்கை அரசு அறிவித்ததின் பிற்பாடு) இந்த நில ஆக்கிரமிப்பானது அதிகரித்துள்ளது.

காத்தான்குடி முஸ்லிம் பிரதேச சபையின் இந்த அத்து மீறிய நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக மண்முனைப்பற்று பிரதேச சபை பல தடவைகள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து குறித்த ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் குறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை அத்துடன் தாக்கல் செய்த வழக்குகள் பல இன்னும் நிலுவையில் உள்ளன.

இதேவேளை பல மாதங்களுக்கு முன்பு மண்மனைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான தமிழர்களின் நிலங்களை இனிமேல் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோமென உறுதியளித்த கடிதமொன்றையும் காத்தான்குடி நகரசபையானது மண்முனைப்பற்;று பிரதேச சபைக்கு வழங்கியிருந்தும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை அது நிறுத்தவில்லை.

இந்த நில ஆக்கிரமிப்பானது பிரதி அமைச்சர் எம் எல் எம் pஸ்புல்லா அவர்களின் தலமையின் கீழ்தான் நன்கு திட்டமிட்ட முறையில் நடைபெறுகின்றது இதற்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வெளிப்படையாகவே தனது பூரண ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்குவதுடன் இன்னும் சில தமிழ் அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தையாக செயல்படுகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

அண்மையில் மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட ஆரையம்பதி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள (157) திருநீற்றுக்கேணி எனும் இடத்தில் காத்தான்குடி நகரசனையினால் காதி நீதிமன்றக் கட்டடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு தொடக்கம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு இயலாமல் இருப்பதாக ஆரையம்பதியிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முஸ்லிம்கள் தற்போது பூரணமாக அரசுடன் இணைந்திருப்பதனால் இந்த ஆக்கிரமிப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என இந்த பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர் அத்துடன் இது இன முரண்பாட்டை மேலும் உருவாக்கும் செயல்பாடாகும்.

இந்த நில அக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தக்கோரி மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களும் தமிழ் மக்களும் இணைந்து அண்மையில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அப்போது அங்கு பிரசன்னமான கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் அவர்கள் இந்த அத்து மீறிய நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

ஆனால் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு சில வாரங்களுக்கு பிற்பாடு இடம்பெற்ற ஒரு நிகழ்வின்போது அதே முதலமைச்சரிடம் நில ஆக்கிரமிப்புக்ளை நிறுத்தக்கோரி தமிழ் அமைப்பு ஒன்றினால் மனுக் கொடுக்கப்பட்டது குறித்த மனுவைப் பார்த்த முதலமைச்சர் அவர்கள மனுவை நிராகரித்து பகிரங்கமாகவே முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்பை ஆதரித்து பேசி இருந்ததும் யாவரும் அறிந்ததே.

எனவே இந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழர்களின் ஒரே ஒரு அரசியல் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக முன்வரவேண்டும் என குறித்த பிரதேச தமிழர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் சிங்கள அரச படைகளுடன் முஸ்லிம்களும் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்ததினால்தான் பல இடங்களிலும் இனக்கலவரம் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறக்க முடியாது. அவ்வாறு பல இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவேதான் இந்த ஆரையம்பதி எல்லைக் கிராமமும் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

0 Responses to மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com