Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு அரசியல் கைதிகள் அரசு தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் அரசிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளை அரசு கட்டம் கட்டமாக விடுவிப்பது போல தம்மையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை சிறை ஒன்றில் கடந்த 17 ஆண்டுகளாக அரசியல் கைதியாக இருக்கும் ஒருவர் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையில் 650 தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தாம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் தமக்கு விடுதலை கிடைக்கும் என் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரம் பலர் எவ்வித விசாரணையும் இன்றி பல ஆண்டுகள் சிறையில் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ள நீதி அமைச்சர் அத்தாவுடா செனவரத்தின, இவர்கள் மீது வழக்கு தொடுப்பதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்த முடிவை தான் சட்டமா அதிபரை கலந்து பேசி முடிவு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் மீது நாட்டின் நலனுக்கு எதிரான செயல்கள் புரிந்தது உட்பட பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இதயமற்றவர்களே போதும் இனியாவது விடுதலை செய்யுங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com