இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பொதுமக்களின் இழப்புக்கள் குறித்து விபரிக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில், இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய செயலாளர் நாயகம் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவானது புதிய புகைப்படங்களைப் பரிசீலனைக்கு எடுக்கக் கூடும் என்று ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
நிவ்யோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தது.
இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களடங்கிய குழுவானது இந்த மாதிரியான சாட்சியத்தை பரிசீலனைக்கு எடுக்க முடியுமா? என்றும் இன்னர்சிற்றி பிரஸ், பர்ஹான் ஹக்கிடம் கடந்த வெள்ளிக்கிழமை வினவியிருந்தது.
எது பொருத்தமானது என்பதை தீர்மானிப்பது நிபுணர் குழுவைப் பொறுத்த விடயம் என அவர் அதற்கு பதிலளித்துள்ளார்.
அத்துடன், இந்த புகைப்படங்கள் வரையறைக்குள் உள்ளடக்கப்படக்கூடிய தன்மையை கொண்டவையாக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to போர்க்குற்ற புகைப்படங்கள் விசாரணைகளுக்கு எடுக்கப்படும் : ஐ.நா பிரதிப் பேச்சாளர் தெரிவிப்பு