Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா.ராசா அறிக்கை

தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நம் சொந்த இனத்தை கொன்றொழித்த சிங்கள அரசுடனான இந்திய அரசின் நட்புறவை கெடுக்கும் வகையில் பேசியதாக ஜூலை 12-ம் தேதி கைது செய்யப்பட்ட சீமானின் மீது ஜூலை 16-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.கடந்த நான்கரை மாதகாலமாக இவ்வழக்கின் மீதான விசாரனை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருமுறையும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் இழுத்தடிக்கும் நோக்கத்தோடு அரசு தரப்பினர் வாய்தா வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த முறை இவ்வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை ஜூலை 25 ம் தேதி இன்று நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்த பின்னரும் அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே வராமல் வாய்தா வாங்கிக்கொண்டு விட்டனர்.முன்னாள் முதல்வரை ‘’வாய்தா ராணி’’ என்று கூறி வரும் தங்களை ‘’வாய்தா தாத்தா’’ என்று கூற எவ்வளவு நேரம் ஆகும்.எங்கள் சீமானை பார்த்து எதற்காக அஞ்சுகிறீர்கள்.

நேற்றைய தினம் தமிழக முதல்வர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு சீராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாதாகவும், ஆனால் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவை சீர்குலைக்க சில காங்கிரஸ்காரர்கள் முயற்சி செய்வதை பார்த்தால் என்னை மீண்டும் தனி நாடு கேட்க தூண்டுவது போல் இருக்கிறது என்கிற தொனியில் பேசியுள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதில்லையா!.

தமிழினத்திற்காக குரல் கொடுத்த சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.ஆனால்! தமிழின தலைவர் என்று கூறி கொள்ளும் முதல்வர் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நம் சொந்த இனமக்கக்ளை கொன்றொழிக்க துணைபோன கருணாநிதி தமிழினத்திற்காக யார் பேசினாலும் அவர்களை சிறையில் வைத்து வேடிக்கை பார்த்து வருகிறார். அது போல சீமானையும் உள்ளே வைத்து துன்புறுத்தி வருகிறார்.

இச்செயல் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை எற்படுத்தியுயள்ளது.காலம் இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க தவறாது. இந்நிலை தொடர்ந்தால் தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். 1,76000000 கோடியை வாரி இறைத்தாலும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று இந்த கலைஞர் அரசை எச்சரிக்கிறோம்.

இப்படிக்கு

தடா,ராசா

நாம் தமிழர் கட்சி தலைமை செயலாளர்

0 Responses to சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்: நாம் தமிழர் கட்சி தடா. ராசா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com