வருகிறாய் வருவாய் என்று
வதந்தி சொல்ல விருப்பமில்லை - உன்
வரவை எண்ணி வெருள்கின்ற
வஞ்சகருடன் நானில்லை..
வல்லரசுகளே வியந்தவனே
வரலாறு போற்றும் உன்னை - எம்
வாழ்வில் வந்த சூரியனே - நீ
வந்தாலே விடியும் காலை
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகளை போதவில்லை
வணங்குகிறேன் தெய்வமாக
வையகமே வாழ்த்தும் உன்னை...!
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to வையகமே வாழ்த்தும் உன்னை...!