Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தரத் தீர்வென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாத மாகாணசபை அல்ல. வட கிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தரத் தீர்வென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

வட கிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரே முதலமைச்சராக வருவார் என்று கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே யே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இணைந்த மாகாணதிற்குள் யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வரலாம்.

அது முஸ்லிமாக இருந்தாலும் சரி தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்சரி எந்தத் தீர்வாக இருந்தாலும் இணைந்த வடகிழக்கிற்குள் இருக்க வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.முதலமைச்சரின் கருத்தின்படி மாகாண சபை தான் இறுதித்தீர்வாக கொள்ளப்படுகின்றது. மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது வட கிழக்கு மக்களுக்காகத்தான்.

ஆனால் இன்று ஏனைய மாகாணசபைகளும் உருவாக்கப்பட்டு எவ்வித அதிகாரங்களும் இன்றி வெறும் பொம்மைகளாக காணப்படுகின்றன. எனவே மாகாணசபை தமிழ் பேசும் மக்களின் இறுதித்தீர்வல்ல.இணைந்த வடகிழக்கிற்குள் காணப்படும் அதிகாரத்துடனான தீர்வே இறுதித்தீர்வாகும். இந்நிலையில் எந்தவித பிரதேச பாகுபாடுகளும் எமக்கு கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 Response to இணைந்த மாகாணங்களுக்குள் நிரந்தரத் தீர்வே தமிழரின் இலக்கு: அரியநேத்திரன்

  1. தன் இனத்தையே பதவிக்கும் பகட்டுக்கும் காட்டிக் கொடுத்த துரோகிகளின் கதைகளை நாம் ஏன் மதிக்க வேண்டும். அது சரி அரியநேந்திரன் அவர்களே இத்தனை காலம் நீங்களும் உங்கள் கட்சியும் இணைந்த மாகணத்தை பெறுவதற்காக என்ன செய்து கிழித்தீர்கள். எமை அழிக்க உதவிய இந்திய அரசியல் நாய்களின் காலடியில் சென்று சஸ்டாங்கமாக வீழ்ந்து கொஞ்ச நஞ்சமுள்ள எமது மானத்தையும் காற்றில் பறக்க விட்டதைத் தவிர. இனி நாளை சிங்கள எஜமானிடம் சென்று எதை கேட்டுப் பெறப்போகின்றீர்கள்? அங்கே காலில் வீழ்ந்தாலும் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படுமா?

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com