கனடாவில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி, கெரி ஆனந்தசங்கரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை 80 வீதத்தில் இருந்து 47 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இந்தநிலையில் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கனடாவுக்கு எம் வி சன் சீ கப்பலின் மூலம் சென்ற இலங்கை அகதிகளுக்கும் இந்த நடைமுறையினால் பாதிப்பு ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் ஒரு மாதத்தை கொண்டு, அகதிகளின் அங்கீகார்த்தில்; வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முடிவுக்கு வரமுடியாது என ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்
கனேடிய குடிவரவு அமைப்பு, பொதுமக்களின் அழுத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்
இதற்கு பதிலளித்துள்ள கனேடிய குடிவரவு அமைப்பின் பேச்சாளர், சார்ல்ஸ் ஹெவ்கின்ஸஸ், தமது அமைப்பு, பொதுமக்களின் அழுத்தங்களுக்கு முன்னுரிமை வழங்காது என குறிப்பிட்டுள்ளார்
2009 ஆண்டில் கனடா, 90.7 வீத தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to கனடாவில் அகதிகள் அங்கீகரிப்பு வீழ்ச்சி தொடர்பில் அவதானிப்பு – கனேடிய தமிழ் காங்கிரஸ்