கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் படையினரால் அச்சுறுத்தப்பட்டு அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படைமுகாம்களுக்கு விசாரணைகளுக்கென அழைக்கப்படும் இவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சில படை முகாம்களில் வாரத்தில் குறித்த நாட்களில் வந்து ஒப்பமிட வேண்டும் எனவும் படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு ஒப்பமிடச் செல்லும் வேளையிலேயே படைத்தரப்பு மற்றும் புலனாய்வாளர்களால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஒப்பமிடச் சென்ற சிலர் காணமல்போனதாகவும், பெண் போராளி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் பின்னர் தலையீடுகளை அடுத்து ஓரிரு நாட்களின் பின்னர் வீடு திரும்பியிருப்பதாகவும் மனித உரிமை அலுவலக அதிகாரிகள் கூறினர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் காணாமல் போகின்றனர்