எங்கேயெங்கே? எப்போ என்னாச்சு?
எதுஉண்மை? எதுபொய்? எவறிவார்?
எதுவாக இருந்தாலும் உலகத்தில்
பிறந்ததினால் வாழ்ந்ததினால்....
வந்திடும் வயது வாராதுபோமா?
வாழ்த்தும் மனங்கள் வாழ்த்தாது போவாரா?
வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்.-ஈழத்தின்
வரலாறு படைத்தவரை வாழ்த்துகின்றோம்.
தேறாதமனங்கள்சிலர்...... கூறாக்கி வேறாக்கி
நீறாக்கி சேறாக்கிப்;போனதினால்.......இன்று
ஆறாத ரணமானதே ஜம்பத்தாறாவது அகவை?
ஆனாலும் ஆலயமணிகள் அழையாது போமோ?
பேறாக நாளைவிடியுமென நம்பும் மனிதகுலம்
நன்றியுடன் இந்நாளை வாழ்த்திடுவார் வாழ்த்திடுவார்.
காந்திக்கும் வள்ளுவனுக்கும் தானா
கற்சிலையும் ஙாற்றாண்டும்?-எங்கள்
கதிரவனின் வயது கணக்கிலில்லையோ?
நீந்திய நெருப்பாற்றை நினைப்பவரால்....
நிலத்தில் என்றும் நினைவும் வாழ்த்தும்
நிலையாதுபோமா?? வாழ்த்துகின்றோம்.
காணொளி இங்கே: தமிழீழம் காக்கும் காவலரண்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



TAMILDEELIPAN @ MUNISWARAN
PULIKALIN THAAGAM TAMILEEL THAYAGANM...
THALAIVAR VARUVAR SINGALAVAN KOTTAM ATAKKUVAR.
THAMIL DESAM MALARA PIRANTHATHAMIL PITHAVE...
UNNAI VAALTHA VAYATHILAAI VANAKKUGIREN.