ரொறன்ரொவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. ரோறன்ரோவிற்கு வடக்கே அமைந்துள்ள மார்க்கம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ‘மார்க்கம் பெயர் கிறவுன்ரில் Markham Fair Grounds) இல் நடைபெறவுள்ளது.இங்கு மாவீரர்நாளுக்கென விசேடமாக உள்ளரங்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கு குளிர்காலத்துக்கேற்றவாறு சூடேற்றப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கக்கூடியதுமாகும்; அத்துடன் மக்கள் மலர் வணக்கம் செய்வதற்கான மாவீரர் துயிலும் இல்லமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கென பிறிதான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது..
இவ் மாபெரும் உள்ளரங்கில் நவம்பர் 27ம் நாள் நான்கு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் 1ஆம் நிகழ்வு காலை 6.30 மணிக்கும் 2ஆம் நிகழ்வு மதியம் 12.00 மணிக்கும் 3ஆம் நிகழ்வு மாலை 03.00 மணிக்கும் 4ஆம் நிகழ்வு மாலை 06.00 மணிக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்
மாவீரர்நாள் நிகழ்வை கனடியத்தமிழர் தேசிய நினைவெழுச்சி அகவம் ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்வு நடைபெறுவதற்காக 40’x40’ அளவைக்கொண்ட பெரிய மேடையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இலவச வாகனத்தரிப்பிட வசதி போதியளவு உண்டு
மாவீரர் நாள் 2010
நவம்பர் 27 2010 சனிக்கிழமை
நான்கு நிகழ்வுகள்
1ஆம் நிகழ்வு: காலை 6.30 மணி
2ஆம் நிகழ்வு:; மதியம் 12.00 மணி
3ஆம் நிகழ்வு: மாலை 03.00 மணி
4ஆம் நிகழ்வு: மாலை 06.00 மணி
Markham Fair grounds
10801 McCowan Road
Markham, ON L3P 3J3
(McCowan Road & Elgin Mills Road East)



0 Responses to ரொறன்ரோவில் மாபெரும் எழுச்சியுடன் மாவீரர் நாள்: ஒரே நாளில் நான்கு நிகழ்வுகள்