கனடிய, தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றல், லெப் கேணல் கில்மன் , பிரிக்கேடியர் தீபன் ஆகியோரின் சகோதரர் ஈகச்சுடர் ஏற்றிவைத்தார் மலர்வணக்கம், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றன. இங்கிலாந்திலிருந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனனி ஜெயப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.
எழுச்சியுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான இளையோர்கள் ஒன்றித்த உணர்வுடன் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர். உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகள் அனைவரும் நேரடியாகக் காணும் வண்ணம் நேரடி ஒளிபரப்பு இளையோர்களால் செய்யப்பட்டிருந்தது.























0 Responses to கனடியத் தமிழ் மாணவர் சமூகம் முன்னெடுத்த மாவீரர் வார தொடக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)