நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் திரு.மதிவாணன் அவர்கள், 13-11-2011 காலை 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்ற செய்தி, அண்ணன் சீமான் முதற்கொண்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. செய்தியறிந்த அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியின் வீர வணக்கத்துடன் மரியாதை செலுத்த உத்திரவிட்டார்.7-11-2010 அன்று மூக்கிலும் வாயிலும் சிறு அளவில் ரத்தம் வருவதை கண்ட மதிவாணன் தனது குடும்பத்தினர் மற்றும் நாம் தமிழர் வழக்கறிஞர் மருத நாயகம் மற்றும் தனது நண்பர்கள் ஆகியோர் உதவியுடன் சென்னை வேளச்சேரியில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க படுகிறார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் ஹிமோக்குளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது அதனால் அவரது இரத்த போக்கை கட்டு படுத்த முடியவில்லை என்று கூறி அவர்களது முதல் கட்ட சிகிச்சையை ஆரம்பிக்கின்றனர்.
பிறகு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை 6000 வரை குறைந்து விட்டது என்று கூறி அவரை தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தொடங்குகின்றனர். நிலைமை மோசமாவதை கண்ட நாம் தமிழர் வழக்கறிஞர் மருதநாயகம் 8 ந் தேதி மாலை நாம் தமிழர் தலைமை பொறுப்பாளர் திரு ராசா மற்றும் வழக்கறிஞர்களுக்கு தகவலை தெரிவிக்கிறார். உடனயாக செய்தி அண்ணன் சீமான் அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . செய்தியறிந்த அண்ணன் சீமான் மிகவும் ஆழ்ந்த மன வருத்தத்துடன், நான் உங்களுடன் இருப்பதாக நினைத்து கொண்டு தம்பி மதிவாணனை காப்பாற்ற என்னென வழிகள் இருக்கிறதோ, அத்தனை வழியிலும் முயற்சி செய்யுங்கள் என்று தலைமை நிர்வாகிகளுக்கு உத்திரவு பிறப்பிகிறார் . உடனடியாக செய்தி மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினரும், வழக்கறிஞர்களும் மருத்துவமனையில் குவிந்தனர் . மதிவாணன் உடல்நிலையில் கவலை கொண்டு இரவுபகலாக மருத்துவமனையில் இருந்தனர்.
மருத்துவர்கள் ரத்தத்தில் வெறும் 6000 எண்ணிக்கையிலிருந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட, வெள்ளை அணுக்கள் கொண்ட மருந்தை இரு தொகுதிகளாக உடலில் செலுத்த நான்கு லட்சம் ஆகும் என்று மருத்துவ மனை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் அவர்களது பெரும் முயற்சியால் வெளியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்கு அந்த மருந்து வாங்கப்பட்டு அவரது உடலில் செலுத்தப்பட்டது . மேலும் அறுபது பாட்டில் ரத்தம் நாம் தமிழர் மற்றும் வழக்கறிஞர்களால் அளிக்கப்பட்டது . தொடர்ச்சியாக ரத்தம் ஏற்றுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் தமிழ் நாடு முழுவதும் செய்தி அறிந்த நாம் தமிழர் தோழர்கள் நிதி உதவி அளிக்க தொடங்கினர். நாம் தமிழர் மற்றும் வழக்கறிஞர் கள் குழுவினர் திரண்டு வந்து பெருமளவில் பொருளுதவி செய்தனர்.
மருத்துவர்கள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டும் ரத்தம் வருவதை நிறுத்த முடியவில்லை .நேரம் செல்ல செல்ல உடலில் உள்ள ஒன்பது துளைகளிலிருந்தும் கண் உள்பட ரத்தம் வெளியேற தொடங்கியது என்ன நோய் என்று கண்டறிய முடியாத நிலையில் நிலைமை மோசமாவதை தொடர்ந்து 11 ந் தேதி அதிகாலை அப்போலா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அங்கு அண்ணன் சீமான் வழக்கை நடத்தும் ஐயா சந்திர சேகர் , வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் உட்பட வழக்கறிஞர்கள் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அப்பலோவில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மூளை செயலிழந்து விட்டதால் அவர் இறந்து விட்டதாக 13 ந் தேதி காலை 10.30 க்கு அறிவித்தனர். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நாங்கள் இருக்கிறோம் நாங்கள் செய்கிறோம் நாம் தமிழர், வழக்கறிஞர் என்று அனைத்திற்கும் தயாராக இருந்தும், எட்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், மருத்துவர்கள் நான்கு நாட்கள் போராடியும், என்ன நோய் அதற்கு என்ன தீர்வு என்று கண்டறிய முடியாத நிலையிலேயே மதிவாணன் மரணம் நம் கண் முன்னே நிகழ்ந்தது.
நாம் தமிழர் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவினர் அவரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் கடைசி வரை பலனளிக்கவில்லை. மதியம் 2 மணிக்கு அவரது உடல் நாம் தமிழர் கட்சியினரின் வீர வணக்கம் முழக்கங்களோடு மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான போந்தூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போந்தூர் கிராமம் சென்னையிலிருந்து மதுராந்தகம் வழியாக சூணாம்பேடு போகும் வழியில் 110 வது கிலோ மீட்டரில் சிறிய சாலை பிரிகிறது. அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் சென்றால் 500 குடிசை வீடுகள் கொண்ட என்ற சிறிய குக்கிராமம் போந்தூர் . அங்கு ஒரு தேநீர் கடை கூட இல்லை என்பதிலிருந்தே அந்த கிராமத்தின் நிலைமையை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. அதில் ஒரு குடிசை வீடுதான் மதிவாணன் பிறந்த வீடு . மதிவாணன் உடலை அவர் வீட்டிற்கு கொண்டு சென்ற உடன் அவரது உறவினர் மட்டுமல்லாது ஊரே கூடி நின்று தம்பி போய் ட்டியடா என்று கதறி அழுதது நம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது .
அண்ணன் சீமானின் வழக்குகளுக்கு மட்டுமல்லாது நாம் தமிழர் வழக்குகளுக்காக தொலைகாட்சிகளுக்கு மதிவாணன் அளிக்கும் பேட்டியும், அவர் கிராமத்தில் நாம் தமிழர் பற்றி அவர் மேற்கொண்ட பரப்புரையும், அவரை சீமானின் தம்பியாக தான் அந்த ஊர் மக்கள் அடையாளம் பார்க்கின்றனர்.அன்று மாலைக்குள் நாம் தமிழர் கட்சியினர் ஆயிரக்கணக்கனோர் வாகனங்களில் திரண்டு வந்து விட்டனர். அண்ணன் சீமானின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் தலைமை நிர்வாகி ராசா உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் அணி அணியாக திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . அங்கு ஏற்படுத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில் அண்ணன் சீமான் அவர்களின் இரங்கல் செய்தியுடன், மதிவாணனின் நினைவுகளை அவரது சமூக பொறுப்பை, தமிழினம் மேல் அவர் கொண்ட பற்றை, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள், அவரது பள்ளி கூட தலைமை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் நினைவு கூர்ந்தனர்.அன்று .சுமார் எட்டு மணியளவில் அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியினர் வீர வணக்கம் செலுத்தி விண்ணை முட்டும் வீர முழக்கங்களோடு அவரது உடல் எரியூட்டப்பட்டது சமூக போராளியாக அண்ணன் சீமானின் தம்பியாக செயல்பட்ட மதிவாணன் மரணிக்கவில்லை நம்மிடையே விதைக்கப்பட்டுள்ளான்
தமிழ் தேவன்
9940024227
நாம் தமிழர்

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மதிவாணன் மரணிக்கவில்லை நம்மிடையே விதைக்கப்பட்டுள்ளான் (படங்கள் இணைப்பு)