Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிலும் மேலான தங்கள் அன்னை மண் வாழ உயிர்கொடை தந்த நாள். விடுதலைப் பயிரின் வேரில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான புலிகளின் செங்குருதி விழுந்து பசளை ஆன நாள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் வழி காட்டலிலும் நமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வதும்தமிழீழ விடுதலையை நிலைநாட்டுவதுமே நமது மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் தலையாய நன்றிக் கடனாகும்.

விடுதலையாளர்களின் உயிர் மூச்சான தாயக விடுதலை கொள்கையை எந்தக் கட்டத்திலும் எவருக்கும் தமிழீழம் விட்டுக் கொடுக்காது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப் படுத்;தும் முயற்சிகள்திசை திருப்பும் சூழ்ச்சிகள் தலைதூக்கியுள்ளன. தாயகம் என்று குறிப்பிடாமல்தமிழர் நிலப்பரப்பை வடக்கு-கிழக்கு மாகாணங்கள் என்றே சிங்களத் தலைமை தாழ்த்துகிறது.

தேசிய இனம்என்றில்லாமல்சிற்றினக் குழுஎன்றே தமிழீழ மக்களைத் தேய்த்துச் சிறுமைப்படுத்துகிறார்கள்.

தமிழீழத்தில் ஏதிலியர்களாய் வீடு வாசல் இழந்து, உண்ண உணவு உடுக்க உடை இழந்து, வாழ்விழந்து நிற்கும் மக்களைக் கவனித்தால் போதும், காப்பாற்றினால் போதும் என்று, ஒரு தேசிய இன விடுதலை நோக்கு தமிழினத்தின் பிச்சை எடுத்தலோடு நிறைவு கொள்ளும் அளவு குறுக்கப்பட்டு கொச்சைப் படுத்தப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் போர் ஒரு தேசிய இன அழிப்புஎன்றில்லாமல் ஒரு வன்முறை இயக்கத்திற்கு எதிரான அரசு நடவடிக்கையாய் முடக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

புலிகளை அழிக்கவே போர், தமிழர்களை அழிக்க அல்ல என்று சிங்கள அரசு முள்ளிவாய்க்கால் வரை புலம்பியது. சிங்கள அரசே! புலிகளைத் தான் அழித்துவிட்டதாகச் சொல்கிறயே இன்று நீ தமிழீழ மண்ணில் சிதைப்பதும் அழிப்பதும் யாரை?

தமிழீழ மண்ணின் அனைத்து ஊர்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றுகிறாய், புத்த கோயில்களை எழுப்புகிறாய், தெருக்கள் அனைத்தும் சிங்களப் படை வெறியர்கள் உலா நிகழ்த்துகிறாய், இன்றும் தான் தமிழ் இளைஞர்களை வெள்ளை வண்டிகளில் கடத்துகிறாய், தமிழ்ப் பெண்களைச் இறைப்படுத்தி உடல் பிழிகிறாய், தமிழ்ப் பள்ளிக்கூடங்களைச் சிங்கள ஆசிரியர்களால் நிரப்புகிறாய், தமிழர் கடலின் மீன்களைச் சிங்கள மீனவர்கள் மேய விடுகிறாய், இன்றும் தான் இன்னும் தான் முள்வேலிக் கம்பிகளின் பின்னல் எங்கள் மண்ணின் தமிழுயிர்களைச் சிறைவைத்து வதை செய்கிறாய், இப்பொழுது நீ அழித்துக்கொண்டிருப்பது புலிகளையா? தமிழர்களையா?

தமிழர்களை நீ அழித்த போது புலிகள் களமாடினார்கள் தமிழர்களை உன்னால் தொடமுடியவில்லை இன்று புலிகள் களத்தில் இல்லை, தமிழர்களை உன்னால் அழிக்க முடிகிறது இதுதானே உண்மை?

அறம் வழுவாத தமிழினம் மீண்டும் தலை நிமிரும் என்பதை மாவீரர் நாளான இந்நாளில் நாம் அறம் வழுவிய நம் எதிரிகளுக்கு எடுத்துச் சொல்வோம்.

நீ நீயாகவே இருப்பாய் என்பது எங்களுக்குத் தெரியும் அதனால் நாங்களும் நாங்களாகவே இருக்கிறோம். அணைந்து போயிற்று என்று உன்னால் கருதப்படும் நெருப்பை நீ விரைவில் சந்திப்பாய்.

உலகத் தமிழர்களே ஒன்று படுங்கள் என்று மட்டும் இந்த வேலையில் உரிமையோடு கேட்கிறோம்.

தமிழீழம் தடைகள் அனைத்தையும் உடைத்து தலை நிமிரும்

ஈழம் மலரும்! காலம் மலரும்!

0 Responses to தமிழீழம் தடைகள் அனைத்தையும் உடைத்து தலை நிமிரும்: காசி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com