இன்று காலை 9.30 மணியளவில் வாகனங்களில் வந்திறங்கிய இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவனர் நந்தாவில் அம்மன் அலயத்திற்கு முன்பாக உள்ள புகையிரத வீதியில் தெற்குப் பக்கமாக தமது தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளினால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் இக்காலப்பகுதியில் படையினர் இத் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்மை அப்பகுதியில் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இப்பகுதியில் வெடிகுண்டு காணப்படுவதாக கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்தே இத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இன்று காலை கொக்குவில் பகுதியில் தேடுதல் நடவடிக்கை