Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் நடைபெற்ற போரில் 40,000 மக்கள் கொல்லப்பட்டதில் பெரும் பங்கு வகித்ததாக கருதப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட நியூயோர்க் போஸ்ட் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

40,000 தமிழ் மக்கள் சில மாதங்களில் கொல்லப்படுவதற்கு பிரதான காரணமாக இருந்தவராக கருதப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு (46) ஐக்கிய நாடுகள் சபையில் முழு இராஜதந்திர மரியாதைகளுடன், பதவி வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் நடைபெற்ற போரில் சில்வா மிக முக்கிய பங்கை வகித்திருந்தார். மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தபோதும், அவர் .நாவுக்கான சிறீலங்காவின் பிரதி பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் நியூயோர்க் நகருக்கு சென்று பதவியை ஏற்றுள்ளார். போர்தவிர்ப்பு வலையத்தினுள் தங்கியிருந்த அப்பாவி தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீது எறிகணைகளை வீசிய சிறீலங்கா அரசு போரை நிறைவுசெய்திருந்தது. ஒரு வருடம் கடந்த நிலையில் சில்வாவின் நியமனம் இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களை சுட்டு படுகொலை செய்ததாக சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. சில்வாவின் இந்த நியமனம் எமக்கு முகத்தில் அறைந்ததுபோல் உள்ளது என சில்வா தொடர்பில் தகவல்களை அறிந்த விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட தமிழ் இனத்திற்கு உரிமைகளை வழங்குவதற்கு பௌத்த சிங்களவர்களை கொண்ட அரசு தொடர்ந்து மறுத்து வந்ததால் 1983 ஆம் ஆண்டு போர் ஆரம்பமாகியிருந்தது. விடுதலைப்புலிகள் வன்முறையான வழிகளில் தமது எதிர்ப்பை காண்பித்திருந்தனர்.

சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். மிகப்பெரும் மனித உரிமை மீறல்களும் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்தன. சில்வாவே பிரதான குற்றவாளி என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில்வா தான் நடத்திவரும் இணையத்தளத்தில் தனது வன்னிப் போர்முனைகள் தொடர்பான தகவல்களையும் பதிவேற்றியுள்ளார். அவர் தற்போது .நாவின் வளாகத்திற்கு அண்மையில் உள்ள மூன்றாவது வீதியில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to போர்க்குற்றவாளிக்கு ஐ.நாவில் பதவி: த நியூயோர்க் போஸ்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com