Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் எழுச்சி வாரத்தின் மூன்றாவது நாளான செவ்வாய்கிழமை அன்று றையர்சன் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு மாலை 6.30 மணியிலிருந்து 9 மணிவரை இடம்பெற்றது.

இந்தமாதம் பல்வேறு இடங்களில் நடைபெறும் மாவீரர் நாள் வரிசையில் நடைபெற்ற இந்த நிகழ்வானது மாணவர்களின் தாயக விடுதலைமீதான உறுதியை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

கனேடிய தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் மலர்வணக்கம் ஆகியவை இடம்பெற்றன. அதன்பின் றையர்சன் தமிழ் மாணவர்களின் தயார்ப்படுத்தலில் எழுச்சி நடனங்கள் எழுச்சி உரைகள் மாவீரர் கானங்கள் மற்றும் நாடகம் ஆகியவை இடம்பெற்றன.

அத்தோடு தமிழீழத் தேசியச் சின்னங்களான தேசியப் பறவை செண்பகம் தேசிய விலங்கு சிறுத்தை தேசிய மரம் வாகை மற்றும் தேசிய மலர் காந்தள் போன்றவற்றைப் பற்றிய விளக்கமும் அங்கு வந்திருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தமிழ் மாணவன் ஓருவனின் எழுச்சி உரையும் அதைத் தொடர்ந்து வந்த மாணவர்களின் எழுச்சி நடனமும் நாம்விழ விழ எழுவோம்என்பதையும் தமிழீழம் பெறுவோம் என்பதையும் மையப்பொருளாகக் கொண்டிருந்தன.


நிகழ்வின் இறுதியாக தலைவனின் வழியில் தமிழீழம் அடைவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் எமது தேசிய அடையாளங்களை யாருக்காகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றும் திடசங்கற்பம் பூண்டார்கள்.








காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

0 Responses to கனடா றையர்சன் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com