பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றித் தமது அஞ்சலியை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியேற்றல், மாவீரர்நாள் அறிக்கை வாசித்தல், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல், மாவீரர்களுக்கான ஈகச்சுடரேற்றல், மாவீரர் கானங்கள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள், கொள்கைப் பிரகடனம் ஆகியவற்றோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு தேசியக் கொடியிறக்கத்துடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
டென்மார்க்கில் கேர்ணிங்கில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்திலும்; ஒப்பன்றோவில் அமைந்துள்ள ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்திலும் மாவீரர்களுக்கான சிறப்புப் பூசை வழிபாடு நடைபெற்றது.
26-11-2010 அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு சித்திவிநாயகர் ஆலயத்தில் மக்களால் சிறப்புப் பூசைகள் நடாத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.




0 Responses to டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)