Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் கிழக்குப் பாகத்தில் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் உள்ள St vincent de paul மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27ம் திகதி சனிக்கிழமை அன்று, வெகுசிறப்பாக எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றல், உறுதிமொழி எடுத்தல், கார்த்திகைப் பூக்களால் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகள் மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்த மாவீர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுடன் நடைபெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்களும், எழுச்சிக் கவிதைகளும், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் 20.11.2010அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்றிருந்த மாவீரர் நினைவுப் பேச்சப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு மாவீரர் நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் பிற்பகல் ஐந்து மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் மாவீர் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.






0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com