தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பொதுசுடர் ஈகைச்சுடர் மற்றும் முள்ளிவாய்காலில் மரணித்த போராளிகளுக்கு மக்களுக்குமாக சிறப்பாக அமைக்கப்பட்ட மாதிரி தூபியின் சுடர் என்பன ஏற்றப்பட்டு அகவணக்கம் மணி ஒலி தூயிலுமில்ல பாடலை தொடந்து சிறப்பாக அமைக்கப்பட்ட தூயிலுமில்ல மாதிரிகள் முன் மக்கள் தமது மலர் அஞ்சலி செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நாள் அறிக்கை எழுச்சி நடனங்கள் கவிதைகள் நாடகம் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
அத்துடன் மாவீரர் நினைவுப் பேச்சுப் பேட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு மாவீரர் நினைவுப்பரிசும் சான்றிதழ்களும் வழக்கப்பட்டது.
இவ்நிகழ்வில் அரங்கம் நிறைத்த மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை உறுதியாக்கி மாவீரர்கள் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரவு 10:00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைத்தன.








0 Responses to இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)