Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கும்பகோணம்-பாபநாசத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவீரர் தினப்பொதுக் கூட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் மாவீரர் தினத்தினை ஒட்டி கடந்த 20-11-2010 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன் தலைமை தாங்கினார். சுந்தரபெருமாள் கோவில் ஒருங்கிணைப்பாளர் பழ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். மாவீரர் தின வீர வணக்கத்தினை பாபநாசம் பகுதி கட்சி வழக்கறிஞர் ப.கலியமூர்த்தி நிகழ்த்த ஷேக் முகம்மது உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சதா.முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி.செந்தில் @ திலீபன், வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழ்முழக்கம் பொடா சாகுல் அமீது மற்றும் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசு கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினர். பாபநாசம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இரா.இராதா பிரபாகரன், பாநாசம் ரஜினி,சுரேஷ்,சிவராஜ்,தீன் முகம்மது ,ஜெயக்குமார், ப.கலியமூர்த்தி, ச.சுபாஷ்சந்திரன் உள்ளிட்ட பாபநாசம் பகுதி நகர ,ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் செய்திருந்தனர். பாபநாசம் ஒருங்கிணைப்பாளர் மு.க.மணிகண்டன் நன்றி நவின்றார். கொட்டித்தீர்த்த மழையைப் பொருட்படுத்தாமல் நாம் தமிழர் கட்சியினர் கூட்டத்தினை சிறப்பாக நடத்தியதும், பெருந்திரளான மக்கள் நின்று கேட்டதும் பாபநாசம் பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியது.


காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

0 Responses to கும்பகோணம் பாபநாசத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com