Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது மாவீரர்நாள்

கனடா ரொறன்ரோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் தேசிய நினைவெழுச்சி நாள் 2010 நிகழ்வானது தயாகத்தில் நடைபெறும் அதே நேரமான காலை 6.55 மணிக்கு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லப்பாடல்கள் காணொளியில் காட்சிப்படுத்தப்பட தமிழீழ தேசியத்தலைவர் மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுடரினை ஏற்றியதனைத் தொடர்ந்து, இங்குள்ள துயிலும் இல்லத்தில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

ரொறன்ரோவில் இன்று சற்று பனிப்பொழிவும் அதிகூடிய குளிரும் நிலவியபோதும் பெருந்தொகையான மக்கள் அதிகாலை நிகழ்வில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து எழுச்சி கலைநிகழ்வுகளும், நடைபெற்று முதல் நிகழ்வு நிறைவுப்பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த அரங்கத்தில் இன்னும் மூன்று நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

நேரடியாக நிகழ்வை பார்வையிட இங்கே அழுத்தவும்.

0 Responses to கனடா ரொரன்ரோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர்நாள் நிகழ்வு (நேரடி ஒளிபரப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com