Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை முற்றாக இடித்தழித்து வருகின்ற படையினர் அங்கு பாரிய படைமுகாமை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையினைத் தோற்றுவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளத்திற்கு மேற்காக அமைந்துள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 1990ஆம் ஆண்டில் இருந்து மாவீரர்களின் வித்துடல்களும், நினைவுத்தூபிகளும் விதைக்கப்பட்டுவந்தன.

நான்கரை ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட இம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எண்ணூற்றுக்கும் அதிகமான வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூன்று புள்டோசர் வாகனங்கள் ஈச்சங்குளம் மாவீரர் கல்லறைகளை இடித்தழித்து அவற்றினைக் கொண்டு துயிலும் இல்லத்தின் வேலியைச் சுற்றி மண் அரணை அமைத்து வருகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றன.

துயிலும் இல்லத்தினைச் சுற்றி மாவீரர் கல்லறைகள் மூலம் மண் அரண்களை அமைத்துவருகின்ற படையினர் துயிலும் இல்லத்தின் மத்தியில் பாரிய படை முகாமினையும் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துயிலும் இல்லத்தினைச் சூழ உள்ள பகுதிகளில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தமது பிள்ளைகளின் கல்லறைகள் புள்டோசர்களால் இடித்தழிக்கப்படுவதால் மிகுந்த கவலையடைந்துள்ள பெற்றோர் ‘‘இறந்த பின்னரும் எமது பிள்ளைகளுக்கு நிம்மதி இல்லைஎன்று கண்ணீர் மல்லகத் தெரிவித்துள்ளனர்.

மாவீரர்களின் நினைவுநாளை அண்மித்து செய்யப்படும் இவ் ஈன இரக்கம்மற்ற செயலால் அவ்விடத்து தமிழ் மக்கள் மிகவும் கவலையைடைகின்றனர்.

இதேபோன்று கோப்பாய், கொடிகாமம் உட்பட்ட துயிலும் இல்லங்களும் படையினரால் இடித்தழிக்கப்பட்டு அங்கும் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்தழித்து அங்கு படைமுகாம் உருவாக்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com