Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்றுவரும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளவிருந்த இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரான சாலிந்த திசாநாயக்கவை வரவிடாமல் போராட்டம் நடாத்தி விரட்டியடித்த கன்னட வாழ் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி. தலைவர் சீமான் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் விபரம் வருமாறு:

கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட நாம் தமிழர் கட்சியின் எம் உயிர்த் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம்நாம் தமிழராய் எழுவோம்!’ என்றும் உரிமைக்குப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன். தமிழின வரலாற்றில் எழுச்சிமிக்க இந்நிகழ்ச்சிக் குறிப்பு பதிவு செய்யப்படும். களமாடும் வேங்கைகளை உளமாரப் பாராட்டுகிறேன்,புரட்சி வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

நன்றி

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.

0 Responses to சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com